(நா.தனுஜா)

தற்போதைய நெருக்கடியைக் குறைப்பதற்கு மிகவும் வறிய மக்களுக்கு எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும், கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றார்கள்.

அதேவேளை தற்போதைய நெருக்கடியைக் குறைப்பதற்கு மிகவும் வறிய மக்களுக்கு எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும், விவசாய உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதும், கைத்தொழில் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகும்.