மட்டக்களப்பு, உன்னிச்சி குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞனனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன் குளிக்கச் சென்றுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றின் மூலம் குறித்த குளத்திற்கு சென்று குளித்து விளையாடிக் கொண்டிருந்த போது செல்பி எடுக்க முயற்சித்ததையடுத்து ஆழமான இடத்தில் விழுந்து   உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த என்.எம்.ரியாஸ் என்னும் 20 வயது இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞன் 2 வாரங்களுக்கு முன் மக்கா யாத்திரையிற்கு சென்று வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ படையினரின் தீவிர தேடுதல் முயற்சியின் பின்னர் குறித்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்பே அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.