ராஜகிரிய, கலபலுவெவ பகுதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநாகர சபையின் தீயணைப்புத் துறையினர், தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக எந்தவொரு உயிரிழப்பு சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.