கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில், சுகாதார பணியாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட 30,000 சோடி சப்பாத்துக்களை நன்கொடையாக வழங்குவதற்கு நைக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிக்காக்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ், மெம்பிஸ், நியூயோர்க் நகரம் ஆகிய பகுதிகளில் உள்ள படைவீரர்கள், நிர்வாகத்திற்குள் உள்ள சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கே இவ்வாறு விசேட சப்பாத்துக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பார்சிலோனா, பெர்ளின், லண்டன், மிலான், பாரிஸ் மற்றும் பெல்ஜியம் உட்பட ஐரோப்பா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு மேலதிகமாக  2,500 சோடி சப்பாத்துக்களையும் வழங்குவதற்கு குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயோர்க் நகரத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு சுமார் 95,000 சோடி காலுறைகளை வழங்கவுள்ளதாகவும் நைக் நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நைக் நிறுவனத்தின் இந்த மகத்தான உதவிக்கு நியூயோர்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.