கணினி உலகில் அதிகம் பயன்படுத்தும் கொப்பி, பேஸ்ட் செயல்பாடுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், ஸ்மார்ட் போன் மூலம் பொருட்களையும் எழுத்துக்களையும் படம்பிடித்து ஒட்டுவதற்கான தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கு இனி கீபோர்ட் (keyboard) அல்லது மவுஸ் ( Mouse) தேவையில்லை, ஆனால் ஸ்மார்ட்போனில் ஆக்மென்டேட் ரியாலிட்டி (AR) செய்யும்.

பாஸ்நெட் எனப்படும் ஆக்மென்டேட் ரியாலிட்டி (augmented reality) தொழில்நுட்பம் உள்ள ஒரு ஸ்மார்ட் போன் மூலம் பொருட்களையோ எழுத்துக்களை படம்பிடிக்கும் போது, அதன் விளிம்புகள் கணக்கிடப்பட்டு பின்புலங்கள் அழிக்கப்படும். பின்னர் அதை போட்டோ ஷொப் செயலியில் ஒட்டிக் கொள்ளலாம்.

சோதனையளவில் உள்ள இந்த பயன்பாடு இறுதியில் பயனர்களை அடைய வெகுநாட்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில், இதன் முன்னோட்ட காணொளியை கூகுள் நிறுவன ஊழியர் சிரில் டயக்னே ட்வீட் செய்துள்ளார்.

காணொளியை பார்வையிட - https://twitter.com/cyrildiagne/status/1256916982764646402