கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களில் மேலும் ஒரு குழுவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக மற்றுமொரு சிறப்பு விமானமொன்று இன்று காலை, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -503 என்ற சிறப்பு விமானமே இன்று அதிகாலை 12.31 மணியளவில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் இருந்து 208 இலங்கை மாணவர்கள் நேற்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் மூன்று நட்சத்திரர ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.