தொடக்கத்திலிருந்தே SDB  வங்கி சவால்களை எதிர்கொண்டு வலுவாக நின்று, நெருக்கடி காலங்களில் நாட்டிற்கு உதவுவதில் மட்ண்டும் முன்வந்துள்ளது. சமூக நன்மைக்கான இந்த உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, SDB  வங்கியும் அதன் ஊழியர்களும் தங்கள் அரைநாள் சம்பளத்தை வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட COVID-19 நிவாரண நிதிக்கு பங்களிக்க முன்வந்தனர்.

அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகள் மின்னியக்க சிற்றூர்தி  (Electric buggy car) ஒன்றை கொள்வனவு செய்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்க உதவியது. வைத்தியசாலையின் இயக்குநர் Dr. பிரியந்த கருணாரத்ன கூறுகையில், “முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் அவசரத் தேவைகளை விரைவாக நிறைவேற்றிய SDB வங்கிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் இவை COVID-19  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை” எனக்குறிப்பிட்டார்.

நோயாளிகளை அனுமதிக்கும் இடத்திலிருந்து வார்டுகளுக்கு விரைவாக கொண்டு செல்வதற்கு, மின்னியக்க சிற்றூர்தி (Electric buggy car)  க்கான அவசரத் தேவையை வைத்தியசாலை தெரிவித்தது. அனுமதிக்கும் இடத்திலிருந்து வார்டுகளுக்கு இடையில் இருக்கும் கணிசமான தூரம் காரணமாக, சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ரெச்சர்களைப் பயன்படுத்தி COVID-19   நோயாளிகளை அனுப்புவதில் வைத்தியசாலை ஊழியர்கள் முன்பு பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

COVID-19  நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் நேரத்தையும் உழைப்பையும் சேமிக்க மின்னியக்க சிற்றூர்தி (Electric buggy car) உதவும் என்றும், மின்னியக்க சிற்றூர்தி வசதி நோயாளிகளின் வார்டுகளுக்கு செல்வதை எளிதாக்கும் என்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் இயக்குநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை நன்கொடை வழங்கும் நிகழ்வில் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) தேஷபந்து தென்னகோன், SDB  வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பல முகாமைத்துவ உறுப்பினர்கள் பங்கேற்றனர். ளுனுடீ வங்கி தலைமை நிர்வாக அதிகாரி திலக் பியதிகம, உரையாற்றுகையில், 'நாட்டின் ஊழுஏஐனு-19 நிவாரண பணிகளுக்கு உதவுவதற்காக எங்கள் ஊழியர்கள் இவ்வாறு தாராளமான பங்களிப்புகளை வழங்க முன்வந்தமை மிகவும் உற்சாகமளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்

மேலும் “முல்லேரியா ஆதார வைத்தியசாலை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் அயராத முயற்சியில் எம்மாலான பங்களிப்பை வழங்க கிடைத்ததையெண்ணி மகிழ்ச்சியடைகிறோம்.

மின்னியக்க சிற்றூர்தி (Electric buggy car) யை கொள்வனவு செய்வதற்கான நிதியை SDB வங்கியும் அதன் ஊழியர்களும் இணைந்து வழங்கியுள்ளோம். SDB வங்கி சமூக நலனை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் நிவாரணப் பணிகளைத் தொடர்வதற்கும் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, தற்போதைய சுகாதார நெருக்கடியின் போதும் எங்கள் ஊழியர்களின் ஆதரவைக் குறித்து பெருமைப்படுகிறேன்” என்றும் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இடப்பக்கமிருந்து: சுதத் சில்வா - மனித வள முகாமைத்துவ தலைவர் SDB வங்கி, சமீர லியனகே, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் வங்கியியல் தலைவர் SDB வங்கி, திலக் பியதிகம, பிரதம நிறைவேற்று அதிகாரி SDB வங்கி, தேஷபந்து தென்னகோன், மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், Dr. பிரியந்த கருணாரத்ன, பணிப்பாளர் முல்லேரியா ஆதார வைத்தியசாலை