அம்பாறை, வெல்யா பிரதேசத்தில் 27 வயதுடைய ஆசிரியையொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விஷத்தை அருந்தியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் பஸ்வொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

உன்னஸ்கிரிய பிரதேசத்தை வசிப்பிடமாக்க கொண்ட குறித்த நபர் இன்று காலை 7.30 மணியளவில் அவர் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனையடுத்து, 1 1/2 மணித்தியாலத்திற்கு பின் குறித்த பஸ்ஸின் சாரதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மெற்கொண்டு தான் விஷயத்தை அருந்தியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கவலைக்கிடமான நிலையில் இல்லையென வைத்தியப்பிரிவு தெரிவித்துள்ளது.  

எவ்வாறாயினும் குறித்த கொலைச் சம்பவமானது காதல் விவகாரத்தை முன்னிட்டே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.