கொரோனா' வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், ஒரே நாளில், நேற்று மாத்திரம் 27,348 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பர் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் நாட்டில், 22 இலட்சம் பேர் இறப்பர் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 

நம் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால், இலட்சக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். அதிகபட்சம், ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பர் என, நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தப்பட்டாலும், பல மாகாணங்களில், கட்டுப்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.