கல்வியைப் பெறுவதில் தொழில்நுட்ப வசதி குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் தேவை- கரு

Published By: Digital Desk 3

04 May, 2020 | 04:25 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

"பாடசாலைக்கல்வி வெறுமனே அறிவை மாத்திரமன்றி பொறுப்புள்ள, படைப்பாற்றல் மிக்க பிரஜையை உருவாக்குவதற்கும் போதிக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது.

எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்".

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48