logo

ஊரடங்கையடுத்து தனது திருமணத்தை நிறைவேற்ற 100 கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் சென்ற இளைஞர்

04 May, 2020 | 04:23 PM
image

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் (வயது 23) 100 கிலோ மீற்றர் தூரம் தொலைவில் உள்ள மணமகளின் ஊருக்கு சைக்கிளில் சென்று குறித்த திகதியில் திருமணத்தை முடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச இளைஞருக்கும் அவரின் ஊரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புணியா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 25 ஆம் திகதி  திருமணம் செய்து வைக்க சுமார் 5 மாதங்களுக்கு முன்பாக நிச்சயிக்கிப்பட்டுள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு அவரின் திருமணம் நடைபெறுவதற்கு தடையாக இருந்துள்ளது.

திருமணத்துக்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மணமகன் விண்ணப்பித்தார்.

ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மணமகள் வசிக்கும் ஊருக்கு சைக்கிளில் சென்று நிச்சயித்தபடி முக்கிய சடங்குகளுடன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு மணமகளுடன் ஊர் திரும்ப முடிவெடுத்து அதன்படியே செய்து முடித்துள்ளார் குறித்த இளைஞன்.

திருமணம் முடிந்தவுடன் மாலையும் கழுத்துமாய் இருவரும் சைக்கிளில் 100 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சொந்த ஊரை அடைந்துள்ளனர்.

இது குறித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரிடம் கேட்ட போது,  தனது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதாலும் ஊரடங்கு நீக்கப்பட எவ்வளவு காலம் செல்லும் என்றும் உறுதியாக தெரியவில்லை என்பதாலும் நிச்சயித்தபடி முக்கிய சடங்குகளுடன் கோவிலில் திருமணம் செய்து கெண்டதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியலை ஒரு விளையாட்டாக அங்கீகரித்தது சுவீடன்:...

2023-06-05 13:06:25
news-image

டிக்டொக் பார்த்து முட்டை சமையலுக்கு முயன்ற...

2023-06-02 17:07:02
news-image

மக்களை கட்டிப்போட்ட இயற்கையின் கண்கொள்ளாக் காட்சி...

2023-06-01 12:07:08
news-image

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி...

2023-05-29 10:23:44
news-image

மீன்பிடிப் போட்டியில் மீன்களின் உடலுக்குள் உலோகங்களை...

2023-05-26 16:43:05
news-image

களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன்...

2023-05-25 16:38:24
news-image

வவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த அதிசய...

2023-05-24 14:28:12
news-image

காதலித்த கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்றது...

2023-05-20 12:54:29
news-image

காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில்விவாகரத்து கேட்கின்றனர்......

2023-05-19 12:13:33
news-image

30,000 ரூபா சம்பளம் வாங்குபவரிடம் 7...

2023-05-12 18:04:43
news-image

திருடர்கள் பல விதம் ; பாதணிக்கடை...

2023-05-06 11:37:44
news-image

நான் என் வேலையைத்தான் செய்தேன் -...

2023-05-04 14:34:36