உலகையே அச்சுறுத்தும் கொரோனாவினால், உலக பொருளாதாரமும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றியடைய வேண்டும் என்பதே உலகின் தற்போதைய வேண்டுதலாக உள்ளது.

இந்நிலையில், இன்றுவரை உலகில், 3,579,479 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 248,445 பேர் வரை உயிரிழந்தும், 1,158,956 பேர் குணமடைந்தும் உள்ளனர். இதனடிப்படையில் உலகளாவியரீதியில் தற்போதுவரை சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,163,679 ஆக உள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மட்டும் உலகளாவிய ரீதியல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,481 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக அதிக உயிரிழப்புகள் பதிவாகிவரும் அமெரிக்காவில் நேற்றையதினம் 1,154 புதிய இறப்புகள் பதிவானதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 68,598 ஆக உயர்வடைந்தது.

இத்துடன் அமெரிக்காவில் மொத்த தொற்று எண்ணிக்கை 1,188,122 ஆகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,154,550 ஆகவும் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கொரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில் நேற்றையதினம் அதிகூடிய இறப்பு எண்ணிக்கையாக 315 இறப்புகள் பிரித்தானியாவில் பதிவாகியது. இங்கு இதுவரை 186,599 தொற்றுக்குள்ளாகியும் 28,446 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

எனினும் அதிகபாதிப்புகளை கொண்ட ஐரோப்பிய நாடுகள் வரிசையில் ஸ்பெயினும் இத்தாலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 

ஸ்பெயினில் இதுவரை 247,122 பேர் தொற்றுக்குள்ளாகியும், 25,264 பேர் உயிரிழந்தும், 148,558 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 210,717 பேர் தொற்றுக்குள்ளாகியும், 28,884 பேர் உயிரிழந்தும், 81,654 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

ஆசிய நாடுகிளில் கொரோனாவினால் அதிகபாதிப்புக்குள்ளான நாடகா துருக்கி உள்ளது, இங்கு இதுவரை 126,045 பேர் தொற்றுக்குள்ளாகியும் 3,397 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதே வேளை மூன்றாவது அதிக பாதிப்பு கொரொனா தொற்று அறியப்பட்ட முதல் நாடான சீனாவில் பதிவாகிய போதும் தற்போது சீனா கோரோனா தொற்றை முழுவதும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கு நேற்றையதினம் இருவர் மட்டும் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

ஆசிய நாடுகிளில் அடுத்ததாக இதிக பாதிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளது. இங்கு இதுவரை 42,505 தொற்றுக்குள்ளாகியும் 1,391பேர் உயிரிழந்தும், 11,775 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அத்துடன் இந்தியாவில் அதிகமான கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. அங்கு மொத்தம் 12974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் பாதிப்புக்குள்ளான நாடுகள் வரிசையில் இலங்கை 31 ஆவது இடத்தில் உள்ளது. 

இலங்கையில் இதுவரை 718 பேர் தொற்றுக்குள்ளாகியும் 7 பேர் மரணமடைந்தும் 184 பேர் குணமடைந்தும் உள்ளனர். இதனடிப்படையில்  527 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.