மீண்டும் 5 ஆயிரம் ரூபா ! , மே மாத ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

04 May, 2020 | 07:07 AM
image

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தற்போதைய நிலைமை கருதி மீண்டும் இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தக் கொடுப்பனவின் 2 ஆம் கட்டம் இதன்படி இன்றைய தினம் முதல் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாவதுடன், வெசக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும். 

வயோதிபர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுவினருக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் உரித்தாகும்.

மே மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47