தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

04 May, 2020 | 07:03 AM
image

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்லும் திட்டமானது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே நடைமுறையில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாகும் என அறியத்தரப்படுகின்றது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ளோர் இன்று திங்கட்கிழமையில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களான 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களை உடையோர் வெளியில் சென்று அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதிகக்கப்படுவர்.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ளோர் இவ்வாறு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாவட்டங்களில் உள்ளோர் ஊரடங்கு அமுலில் இல்லாத நேரத்தில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17