சகல குளிர்பானங்களிலும் அடங்கியுள்ள சீனிக்கலவையின் அளவை வர்ண குறியீடுகளின் மூலம் குறித்துக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைக்கான வர்த்தமானிய அறிக்கையானது முன்னரே வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 100 மில்லி லீற்றர் குளிர்பானத்தில் சீனி 11 கிராமிற்கு அதிகமாக காணப்படின் சிகப்பு நிறத்தினாலும் 2 -11 கிராமிற்கு உட்பட்டதாயின் மஞ்சள் நிறத்தினாலும் காணப்படல் வேண்டும்.

இதேவேளை, 2 கிராமிற்கு குறைவானதாயின் பச்சை நிற குறியீடு காணப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.