ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ்ய நாணயக்கார மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோருக்கு   அரசாங்கத்தின் பிரதியமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக  அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. 

அந்தவகையில் இன்னும்  சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இருவரும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த புதன்கிழமை நடைபெற்ற  அடுத்த வருடத்துக்கான  வரவு செலவுத்திட்டத்தின்   இரண்டாம் வாசிப்பு  மீதான வாக்கெடுப்பில்  லக்ஷ்மன் செனவிரட்ன ஆதரவாக வாக்களி்த்திருந்தார். அத்துடன் மனுஷ்ய நாணயக்கார   அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ்ய நாணயக்கார மற்றும் லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்  அதன் பின்னர்  நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலிலும்   தீவிர மஹிந்த ஆதரவாளராக செயற்பட்டிருந்தனர்.