ஸ்பெயின் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் கொரோனாவால் பெரும் தொகையான உயிரிழப்புக்கள் இடம்பெற்று சுமார்  45 நாட்களுக்குப் பின் அங்கு ஊரடங்குக்கு கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

இங்கு பல்லாயிரக்கணக் காணவர்களது மறைவுக்குப் பின்னர் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் கொரோனா தாக்கத்திற்கு 245,567 பேர் பாதிக்கப்பட்டள்ளனர். அத்துடன் 25,100 பலியாகியுள்ளனர். 146,233 பேர் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக ஸ்பெயினில் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் உடையவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்.

வழமையாகவே காலை வேளையில் ஸ்பெயினில் பார்க் உள்ளிட்ட பொது இடங்களில் சனக்கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்பட்டு வருவதால் அங்கு காலை உடற்பயிற்சி, நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் பலர் கூட்டம் கூட்டமாக நடைப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகமாக தளர்த்திய நாடாக ஸ்பெயின் காணப்படுகின்றது.அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் முக்கிய நகரங்கள் ஒன்றில் சலூன்கள், சிறு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மே மாதம் 15 ஆம் திகதி வரை உணவகங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக இடைவேளையை கடைப்பிடித்து பொது இடங்களில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கொரோனாவால் நேற்றையதினம் ஸ்பெயினில் 2588 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளதுடன் 276 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.