கிம் ஜொங் வெளிவந்து 24 மணி நேரத்தின் பின் வட - தென் கொரிய எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு!

Published By: Vishnu

03 May, 2020 | 07:05 PM
image

வட கொரியா மற்றும் தென் கொரிய படையினர் இரு நாடுகளையும் பிளவுபடுத்தும் இராணுவ மயமாக்கப்பட்ட எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டினை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

வடகொரிய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் காரணத்தினாலேயே பதில் தாக்குதலை தென்கொரியா மேற்கொண்டதாக சியோல் தெரிவித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின், உடல் நலம் குறித்து வெளியான செய்திகளினால், வடகொரியாவின் ஸ்தரத்தன்மை தொடர்பில் அச்சங்கள் எழுந்தது.

எனினும் மூன்று வாரங்களின் பின்னர் கிம் ஜொங் உன், முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக வட கொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாளின் பின்னர் இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17