(இராஐதுரை ஹஷான்)

சுதந்திர வர்த்தக வலயத்திற்கு சொந்தமான கைத்தொழில்கள், பிற தொழிற்சாலைகள் சேவை நடவடிக்கையினை ஆரம்பிக்கும் போது சுகாதார, பாதுகாப்பு துறையினரது பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் . மேற்பார்வை நடவடிக்கைகள் முதலீட்டு சபைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடு தழுவிய ரீதியில் 254 கைத்தொழில்சாலைகள் தொழில் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளன. 6,230 ஊழியர்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட 62  தொழிற்சாலைகள் கடந்த புதன்கிழமை 6695 ஊழியர்களுடன் மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பியகம சுதந்திர வர்த்தக வலயத்துக்கு சொந்தமான 52 தொழிற்சாலைகள் 9031 சேவையாளர்களுடனும்இவடக்குஇ கிழக்கில் உள்ள 25 தொழிற்சாலைகள் 7292 சேவையாளர்களுடன்  தொழில் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள தொழிற்துறை சேவை நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார தரப்பினர் பரிந்துரை செய்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக செயற்படுத்தப்படும் என்றார்.