நடிகர் அஜித் மே முதலாம் திகதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர்.
அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீற்றர் பைக் டிரிப் சென்றுள்ளனர். அப்போது தேநீர் குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து தேநீர் போட்டு கொடுத்துள்ளனர்.
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார்.
சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM