பாலஸ்தீனிய ஆணையகத்துடனான ஒரு ஒப்பந்தத்தையடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனுடனான பல எல்லைகளை தற்காலிகமாக திறந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு வேலைவாய்ப்புகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இரண்டு நாள் எல்லை திறப்பு நடவடிக்கையானது திங்கள் முதல் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

40 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் தொழில்வாய்ப்புகளுக்காக இந்த எல்லையை கடந்து, இஸ்ரேலுக்குள் நுழைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலஸ்தீனிய ஆணையகம் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கிடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலுக்குள் நுழையும் தொழிலாளர்கள் மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வழமையாக தொழில் வாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குள் நுழையும் தொழிலாளர்கள் ஒரே நாளில் திரும்பி சென்று விடுவார்கள். எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே அவர்களுக்கு இவ்வாறு மூன்று வாரம் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான தொழிலாளர்கள் விவசாயம் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.