'எனது மரணத்தை அறிவிக்கும் திட்டத்தையும் வைத்தியர்கள் தயார் செய்திருந்தனர்': இறுதித் தருணங்கள் குறித்து போரிஸ் ஜோன்சன் தெரிவிப்பு

Published By: J.G.Stephan

03 May, 2020 | 03:15 PM
image

கொரோனா பாதிக்கப்பட்டு தான் சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க வைத்தியர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர், மீண்டு வந்தார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து ‛தி சன்' ஊடகத்திற்கு போரிஸ் ஜோன்சன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் போரிஸ் ஜோன்சன் மேலும் குறிப்பிடுகையில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடினமான தருணம். நான் அதை எப்போதும் மறுக்கமாட்டேன். அப்போது நான் அவ்வளவு சுயநினைவுடன் இல்லை.

ஆனால் என்னைக் காப்பாற்ற தற்செயலான திட்டங்கள் மட்டுமே வைத்தியர்களிடம் இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு முகமூடியைப் பொருத்தி, அதன் மூலம் பல லீட்டர், லீட்டராக  ஒக்சிஜன் ஏற்றினர்.

என் மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அந்த நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். 

இந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறப்போகிறேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். 

ஒரு சில நாளில் என் உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், இனி பிழைக்கப்போவதில்லை என நினைத்தேன். 

எதனால் உடல் இவ்வளவு மோசமானது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. வைத்தியர்களும் தாதியர்களும் மிகவும் கடுமையாகப் போராடி என் உயிரை மீட்டுக்கொண்டு வந்தனர். 

அவர்களின் அற்புதமான செயலால் தான் நான் இன்று மீண்டுவந்தேன். எனவே, அவர்களுக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். என அந்தப் பேட்டியில் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04