கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாலை நேர பொழுதுபோக்கு செயற்பாடாக வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து வருகின்றனர்.இதேவேளை கல்முனையை சேர்ந்த இளைஞர்கள் 6 பேரின்  முயற்சியினால்  20 தட்டு பல வர்ணங்களை கொண்ட  பெட்டிப்பட்டம் வடிவமைத்து அதனை வானுயர பறக்கவிட ஆயத்தமாகி வருகின்றனர்.

மேற்படி  பிராந்தியத்தில்  இம்முயற்சியினை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சில தினங்களுக்கு முன்னர்  கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து வான் வெளியில் பொதுமக்களின் பார்வைக்காக  இவ்வாறான பட்டங்களை பறக்கவிட்டு வளாகத்தில் சூழ்ந்திருந்த அனைவரையும் மகிழ்வித்து வருகின்றனர்.