தனிமைப்படுத்தப்பட்ட கண்டி- அக்குறணை, களுத்துறை - பேருவளை ஆகிய பகுதிகளிலுள்ள பிரதேசங்கள் மீளத் திறக்கப்பட்டள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கண்டி மாவட்டத்தின் அக்குறணை , களுத்துறை மாவட்டத்தின் பன்னில , சீனன்கோட்டை ஆகிய பகுதிகளே இவ்வாறு மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.