logo

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம்!

03 May, 2020 | 05:20 PM
image

நுவரெலியா  மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று (02.05.2020) அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று  ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி இவர் முகாமுக்கு திரும்பியுள்ளார். 

குறித்த கடற்படை சிப்பாய் முகாமுக்கு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே கொரோன தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் வீட்டில் இருந்த காலப்பகுதியில் பலருடன் தொடர்பை பேணியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

இவருடன் சுமார் 50 பேர் வரை தொடர்பை பேணியுள்ளனர் என்றும், இவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், கடற்படை சிப்பாயின் மனைவி, பிள்ளைகளை தியத்தலாவை கொரோனா தொற்று தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிகில்கஸ்கட பொது சுகாதார பரிசோதகர் ராஜநாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51
news-image

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய...

2023-06-09 16:12:21