இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கெறி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்.ஹெச்.எஸ். மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்பியிருந்தனர்.
கொரோனாவுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜோன்சன் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.
ஆண் குழந்தை பிறந்த செய்தியையடுத்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜோன்சன்-கெறி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, போரிஸ் ஜோன்சன் காதலி கெறி சைமண்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள செய்தியில்,
கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த இரு வைத்தியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து 'வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜோன்சன்' என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM