எமது நாட்டின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மக்களை பாரிய வரிசுமையில் இருந்து மீட்டெடுக்கும் முகமாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்த ஒன்றினைந்த எதிர்க்கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் முன்னெடுப்புகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கும். எமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளுக்கு அடிப்பணிவதில்லை இச்செயற்பாட்டை தொடர்ந்தும் அரசானது முன்னெடுக்குமாயின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வெகுவிரைவில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதானது நிச்சயம் எனவும் குறிப்பிட்டார். 

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை சேர்ந்த உருப்பினர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளமை மற்றும் அரசின் தற்போதைய பொருளாதார சார்ந்த செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே பாராளுமன்ற உருப்பினரும் ஒன்றினைந்த எதிர்க்கட்சியின் தலைவருமாகிய தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.