யாழில் கைதுசெய்யப்பட்ட 4 பெண்களுக்கும் பிணை!

02 May, 2020 | 09:33 PM
image

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த ஒரு சாரார் சட்டத்துக்குப் புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கிராம மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதுதொடர்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸாருக்கு சம்பந்தப்பட்ட தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதனால் நேற்று வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய முற்பட்ட போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டவரை தடுத்து பெண்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.

இதன்போது பொலிஸார் கண்மூடித் தனமாக பெண்களைத் தாக்கி சந்தேக நபர்களைக் கைதுசெய்ய முற்பட்டனர். இதன்போது நிலமை மோசமாகியதும் பொலிஸார் அங்கிருந்து வெளியேறினர். சம்பவத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான மூன்று பெண்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவரும் அந்தப் பெண்களுக்கு வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்ற இருவரும் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் நால்வரும் பருத்தித்துறை நீதிமன்றில் நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்று சனிக்கிழமை மாலை முற்படுத்தப்பட்டனர்.

அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்கள் இருவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்ற பெண்கள் இருவரும் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.

அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்குவதற்கு பொலிஸார் கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

சந்தேக நபர்கள் நால்வர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ், பிணை விண்ணப்பத்தை முன்வைத்து மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

“மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத பெண்களைத் தாக்க பொலிஸாருக்கும் உரிமை இல்லை. இந்த விடயம் பாரதூரமான மனித உரிமை மீறல். அத்துடன், ஊரடங்குச் சட்ட வேளையில் பருத்தித்துறை வைத்தியசாலை “பாஸ்” உடன்தான் இரண்டு பெண்கள் வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்றனர். அதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றனர் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் நீண்ட சமர்ப்பணத்தை நீதிவான் முன்னிலையில் முன்வைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

2024-12-10 01:39:10
news-image

புதிய அரசாங்கமும் மனித உரிமைகள் விடயங்கள்...

2024-12-10 01:36:55
news-image

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10...

2024-12-10 01:12:24
news-image

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால...

2024-12-10 01:03:09
news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14