கிண்ணியாவில் இயங்கும் ஹஸன் மௌலவி பவுன்டேசன் ஊடாக நேற்று  (01) கிண்ணியா ஹஸனாத் சிறுவர் இல்லத்தில் வைத்து திருமலையில் உள்ள  மூவின ஊடகவியலாளர்களுக்கும்  உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. 

திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களாக செயற்பட்டு வரும் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர்களுக்காக அஸீஸா பவுண்டேசன் ஹெல்பன் ஜேர்மனி ஆகியன இணைந்து ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா அசாதாரண சூழ் நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  ஊடகவியலாளர்களுக்கு நிவாரணமாக இவ் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் அரசி,மா போன்ற அத்தியவசிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்களை ஹஸன் மௌலவி நற்பணிமன்றத்தின் பணிப்பாளர் தாரிக் ஹஸன் அவர்கள் வழங்கி வைத்தார்.

இதில் ஹஸன் மௌலவி நற்பணி மன்ற இணைப்பாளர் ஹமீட் மௌலவி,மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்க தலைவர் ஒலுமுதின் கியாஸ் ஷாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இருபதாயிரம் குடும்பங்களுக்கு இது வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.