(இராஐதுரை ஹஷான்)

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள சவால்களை மக்கள்  கருத்திற்கொண்டு வீட்டில் இருந்து வெசாக் பண்டிக்கையினை கொண்டாடி தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மத அனுஷ்டானங்களை பாதுகான முறையில் பின்பற்றி வெசாக் பண்டிகையினை வீட்டில் இருந்து கொண்டாடுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகை தினத்தன்று வீடுகளில் விளக்கேற்றுவதற்கு தேவையான மூலப்பொருட்களை தடையின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார, பாதுகாப்பு துறையினரது செயற்பாடுகள் அளப்பரியன.

வெசாக் தினத்தன்று சமய நிகழ்களுக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும்.