சங்கக்கார உட்பட அரசியல்வாதிகள் அமைச்சர் பந்துலவின் கருத்துக்கு பதிலடி

By T. Saranya

02 May, 2020 | 04:04 PM
image

அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கருத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உட்பட பல அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தாக்கம் காணப்படுகின்ற போதும் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் அரசாங்கம்  செயற்பட்டு வருகின்றது.

ஆனால் நாட்டு மக்களின் நலன் கருதி பொதுத்தேர்தலை நடத்த வேண்டாம் என எதிர்க் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த வருடங்களில் டெங்கு தாக்கத்தினால் வருடமொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கும் போது தேர்தலை நடத்தாமலா இருந்தோம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கேள்வியெழுப்பியிருந்தார்.

இவருடைய இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்து மிகவும் அறிவார்ந்த கருத்தா? என்று குமார் சங்கக்கார தமது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை பந்துல குணவர்தன கூறியுள்ள முட்டாள்த்தனமாக கருத்தானது தற்போதைய அமைச்சரவை எப்படியானது என்பதை வெளிக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right