பெண் இயக்குனருக்கு வாய்ப்பளிக்கும் அசோக்செல்வன்

02 May, 2020 | 02:34 PM
image

‘ஓ மை கடவுளே’ என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல், வசூல் நாயகனாகவும் உயர்ந்திருக்கும் நடிகர் அசோக் செல்வன், அடுத்ததாக அறிமுக பெண் இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

‘தெகிடி’ என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அசோக்செல்வன் தயாரித்து, நடித்த ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ‘ரெட் ரம்’ மற்றும் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தம்  செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஸ்வாதினி என்ற அறிமுக பெண் இயக்குனர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க அசோக் செல்வன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராவதால், அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க தெலுங்கில் வளரும் நடிகையான நிஹாரிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

இதனிடையே இயக்குநர் ஸ்வாதினி இயக்குநர் சுசீந்திரனின் உ தவியாளர் என்பதும், சுசீந்திரனிடம் ஏற்கனவே உதவியாளராக இருந்த உஷா கிருஷ்ணன், ‘ராஜா மந்திரி’ என்ற படத்தின் மூலம் இயக்குநாகியிருக்கிறார் என்பதும், நடிகர் அசோக் செல்வன் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘மாரக்கர்= அரபிக்கடலின் சிங்கம்’ என்ற மோகன்லால் நடித்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சார்லி குணச்சித்திர வேடத்தில் கலக்கும் 'அரிமாபட்டி...

2024-02-29 19:08:58
news-image

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர்...

2024-02-29 19:05:59
news-image

ஊர்வசி நடிக்கும் 'ஜே. பேபி' படத்தின்...

2024-02-29 19:02:14
news-image

விஜய் சேதுபதி வெளியிட்ட 'அக்காலி' பட...

2024-02-29 18:57:41
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-02-29 18:54:27
news-image

சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கும்...

2024-02-27 15:11:49
news-image

கல்லூரி இளைஞர்களுக்கான கதை 'போர்'

2024-02-27 14:10:05
news-image

மல்யுத்த வீரராக நிஹார் நடிக்கும் 'ரெக்கார்ட்...

2024-02-26 16:57:52
news-image

நேச்சுரல் ஸ்டார்' நானி' நடிக்கும் 'சூர்யா'ஸ்...

2024-02-26 14:45:53
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'இடி...

2024-02-26 13:44:48
news-image

வித்தைக்காரன் - விமர்சனம்

2024-02-24 18:35:42
news-image

இயக்குநர் மிஷ்கின் வெளியிட்ட 'டபுள் டக்கர்'...

2024-02-24 18:32:29