முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்

02 May, 2020 | 12:30 PM
image

வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழம் ஏற்றிவந்த முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் ஏற்றிவந்த பழங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரான்குளத்தில் இருந்து வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழங்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருக்கையில் முச்சக்கர வண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

மேற்படி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

அத்துடன் ஏற்றிவந்த இருபதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான வெள்ளரிப்பழங்கள் வீதியில் சிதறுண்டும், நசிபட்டும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. 

மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10