உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,401,002 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அதிர்ச்சியிலுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 1,897ஆக அதிகரித்துள்ளது.இதைவிட ஏனைய உலக நாடுகளில் இறப்பு எண்ணிக்கை கடந்த நாட்களைவிட இறுதியான இரு தினங்களில் குறைந்து காணப்படுகின்றது.

கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 239,448 ஆக உயர்ந்துள்ளடன், கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,080, 100ஆக உள்ளது. மேலும், 2,078,925 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

*அமெரிக்காவில் 1,131,030 பேர் பாதிக்கப்பட்டள்ள நிலையில் அங்கு இதுவரை 65,753 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை, அங்கு நேற்று மாத்திரம் 1,897 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இத்தாலியில் 207,428 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 28,236 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று மாத்திரம் அங்கு 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஸ்பெயினில் 242,988 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 24,824 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு நேற்று மாத்திரம் 281பேர் உயிரிழந்துள்ளனர். 

*பிரான்சில் 167,346 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 24,594 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று மாத்திரம் அங்கு 218 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இங்கிலாந்தில் 177,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 27,510 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று மாத்திரம் அங்கு 739 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஜேர்மனியில் 164,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 6,736 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அங்கு நேற்று மாத்திரம் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.