(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 275 வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கியுள்ளது.
இன்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 25 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்தது.
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 9.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.
அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில் மேலும் 526 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 145 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தற்போது முடக்கப்பட்டுள்ள கொழும்பு - நாரஹேன்பிட்டி , தாபரே மாவத்தை பகுதியில் நேற்று புதிய தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த பகுதியிலும் அதனை அண்மித்த பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் இன்று பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக மாதிரிகளைப் பெறும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி கூறினார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய கொழும்பில் மட்டும் இதுவரை 158 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மொத்தமாக 275 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் கம்பஹாவில் 52 பேரும் களுத்துறையில் 65 பேரும் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், கொரோனா பரவல் நூறு வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் முன்னெடுக்கப்படும் கொரோனாவை கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை 3,000 வரை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் வெசாக் பண்டிகை காலம் வரை விழிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சில வரையரைகளுடன் மக்கள் தங்களின் நாளாந்த செயற்பாடுகளை குறிப்பிட்ட காலம் முன்னெடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM