புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான உப்பு வாய்க்காலில், சந்தேகத்திற்கிடமான கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

உப்பு வாய்க்காலின் உரிமையாளர் புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று கைக்குண்டை ஆராய்ந்ததுடன் புத்தளம் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்டு பாதுகாப்பான முறையில் வெடிக்கச்செய்துள்ளனர்.

82 ரக கைக்குண்டு ஒன்றே இவ்வாறு வெடிக்கச்செய்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.