குருணாகலை, கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சிலர் சுரங்கத்தின் 1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது. 

நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே இத்தொகையை 400 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவித போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல்  நிலத்தின் மேல்பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

எனினும் எந்த அதிகாரிகளும் இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. இந்நிலையிலேயே நிலத்துக்கு அடியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.