'முக்கிய அரசியலமைப்புசார் கேள்வியைத் தவிர்த்துவிட்டே ஜனாதிபதி செயலாளர் பதில் வழங்கியுள்ளார்': மங்கள கடும் விசனம்

Published By: J.G.Stephan

01 May, 2020 | 04:09 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் பாராளுமன்றத்தை விரைந்து கூட்டுவது தொடர்பில் முன்வைத்த  முக்கிய அரசியலமைப்புசார் கேள்வியைத் தவிர்த்துவிட்டே ஜனாதிபதி செயலாளர் பதில் வழங்கியிருக்கிறார் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் வெளியிட்டிருக்கிறார்.

அரச செலவினங்களுக்காக ஏப்ரல் 31 ஆம் திகதி வரையிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் காலத்திற்கான செலவுகளுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு மங்கள சமரவீர கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதற்கான பதில் கடிதம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'என்னுடைய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியமான அரசியலமைப்புசார் கேள்வியைத் தவிர்த்துவிட்டு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்த பதில் வழங்கியிருக்கிறார்.

'அரசியலமைப்பின் 150(3) ஆம் சரத்து ஜனாதிபதிக்கு வெற்றுக் காசோலை ஒன்றை வழங்கவில்லை என்பதை மீண்டும் கூறுகின்றேன். ஜனாதிபதியால் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்ட தினத்திலிருந்து 3 மாதங்களுக்கு மாத்திரமே நிதியொதுக்க முடியும். அவ்வாறெனின் புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி என்ன?' என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26