தமது தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு வாக்குறுதி அளித்ததன் படி தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லையென தபால் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன.

குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அதிகாரிகள் பெற்றுக்கொண்ட கால அவகாசம் எதிர் வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சின்தக பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பிரச்சனைகள் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் ஜூலை மாதம் 4 ஆம் திகதியிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.