அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வோர்னர் "புட்ட பொம்மா" என்ற இந்திய தெலுங்கு பாடலுக்கு தன் மனைவியுடன் நடனம் ஆடிய வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் ஊரடங்கு அமுலில் இருப்பதால், இந்தக் காலத்தில் வீட்டிலேயே இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில்,  டேவிட் வோர்னர் டிக்டொக் பயன்படுத்தத் ஆரம்பித்த சில நாட்களில் சுமார் 13 லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது பத்து இலட்சம் பார்வைகளை பெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியிட்ட புட்ட பொம்மா பாடல் வீடியோ மட்டும் 2 கோடி பார்வைகளை தாண்டி உள்ளது. புட்ட பொம்மா பாடல் தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த திரைப்பட பாடல் தான் "புட்ட பொம்மா, புட்ட பொம்மா". இந்த பாடல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. யூடியூபில் பல கோடி பார்வைகளை பெற்று இருந்தது.

டேவிட் வார்னர் தனது மனைவியுடன் இணைந்து 'புட்ட பொம்மா' பாடலுக்கு டிக் டாக் செய்து தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, "இது டிக்டாக் நேரம். புட்ட பொம்மா. உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் சூழலிலிருந்து வெளியே வாருங்கள் மக்களே" என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் ட்வீட்டைக் குறிப்பிட்டு டேவிட் வார்னர், "நன்றி சார். அற்புதமான பாடல்" என்று கூறியுள்ளார்.