உழைப்பால் உயர்வு பெற்ற அனைவரும், இன்றைய தினத்தில் போற்றுதலுக்கு உரியவர்களே, உலகின் உள்ள ஒவ்வொரு தொழிலும் ஏதோ ஒரு வகையில் ஏனையோருக்கு ஒரு சேவையை வழங்குவதாகவே உள்ளது.
ஒவ்வொருவரும் தமது வாழ்வாதார தேவைக்காக ஒரு தொழிலை தெரிவு செய்த போதும், அதற்கு மேல் தமது வாழ்வையே பிறருக்கு சேவைசெய்யும் நோக்கில் அர்ப்பணிக்கும் துறைகளைச் சேர்ந்தவர்கள் எப்போதும் நாம் கௌரவிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொவிட்19 என்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மனித செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது உயிரையும் பணயம் வைத்து சேவையாற்றி கொண்டிருக்கும் சுகாதார துறையினர், பாதுகாப்பு பிரிவினர், ஆய்வாளர்கள், சுத்திகரிப்பு தொழிளாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலருக்கு நாம் இன்றைய தினம் நன்றி கூற வேண்டியவர்களாக உள்ளோம்.
அத்துடன் எம் அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
வெறுமனே தொழிலாளர்களுக்கு நன்றி கூறும் நாளக நாம் இன்றைய நாளை நோக்கிய போதும் 1886 சிக்காக்கோவில் நடந்த ஹேமார்க்கெட் விவகாரத்தை நினைவுகூரும் வகையில் சர்வதேச தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

19 ஆம் நூற்றாண்டில் தொழில்மயமாக்கலின் வளர்ச்சியுடன், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்யும்படி கட்டயப்படுத்தப்பட்டனர்.
மே 1, 1886 அன்று, யு.எஸ். தொழிலாளர் சங்கம் 15 மணி வேலை நேரத்தை 8 மணி வரை குறைக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.
பல உயிர்களை பலி கொடுத்த இப் போராட்டமே நாம் இப்போது அனுபவிக்கும் 8 மணி நேர வேலை நேரத்தை உருவாக்க உதவியது.
எனினும் உலகில் ஏற்ற தாழ்வுகளையும் ஏழை, பணக்காரர்கள் என்ற பிரிவையும் ஏற்படுத்தியுள்ள முதலாளி தொழிலாளி என்ற போராட்டம் பல கோரிக்கைகளுடன் இன்னும் அமைதியான முறையில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
எனவே இன்றைய தினத்தில் உழைப்பாளி வர்க்கத்தின் சேவைகளை நினைவு கூரும் முதலாளிவர்க்கம் அவர்களின் தேவைகளையும் உணர்து செயற்பட வேண்டியது முக்கிய கடமையகும்.
இதைவிட இன்றை 2020 மே முதலாம் திகதி முன்னெடுக்கப்படும் தொழிலாளர் தினம் உலகநாடுகளில் ஆர்ப்பாட்டம் இல்லாது அமைதியான முறையில் வீடுகளுக்குள் முடங்கியிருந்தவாறு அனைவரும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்.
உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் !