bestweb

சூலகப்புற்றுநோயின் தன்மைகள்

Published By: Robert

26 Jun, 2016 | 09:09 AM
image

பெண்களுக்கு் ஏற்படக்கூடிய புற்றுநோய்கள் பல உள்ளன. அதில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாசல் புற்றுநோய், சூலகப்புற்று நோய் என பல உள்ளன. இதில் சூலக புற்றுநோய் என்பது கிட்டத்தட்ட நடுத்தர வயது 40 வயதில் சூலகங்களில் ஏற்படக்கூடியது. மற்றைய உறுப்புகளில் ஏற்படக்கூடிய புற்றுநோய்கள் போல் இல்லாது எவ்வித நோய் அறிகுறிகளையும் காட்டாது அமைதியாக உருவெடுத்து வளரக்கூடியது. ஆகையால் சூலகப்புற்று நோய் கண்டறியும் போது சற்று தாமதமாகிய பரவிய நிலையாக இருக்கலாம். இதனால் இதற்கு சிகிச்சைகள் வழங்கும்போது அதாவது சத்திரசிகிச்சையாக இருந்தாலும் சரி ஊசிகள் மூலமான சிகிச்சைகளாக இருந்தாலும் சரி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் விடலாம். எனவே சூலகப்புற்று நோய்கள் மிக ஆரம்பநிலையில் கண்டறிவது சிறந்த வெற்றிகரமான சிகிச்சையை வழங்க உதவும். இதன்மூலம் நோய் ஏற்பட்ட பெண்களும் நோயிலிருந்து முற்றாக விடுபடக்கூடியதாக உள்ளது.

சூலகப் புற்று நோய்களை ஆரம்பத்தில் கண்டறிய என்ன வழி?

சூலகங்களில் புற்றுநோய்கள் வரமுடியும் என்ற விழிப்புணர்வு முதலில் இருக்க வேண்டும். அடுத்ததாக இவ்வாறான புற்றுநோய்கள் அவர்களது பரம்பரையில் அதிலும் தாய்வழி உறவுகள் சகோதரிகளில் இருந்துள்ளதா என்ற விபரம் தேவைப்படும். இவ்வாறான பரம்பரை தன்மை கொண்டவர்கள் சற்று முற்கூட்டியே பரிசோதனைகளை ஒழுங்காக செய்ய வேண்டும். பரிசோதனைகள் என்று வரும்போது சாதாரண ஸ்கான் மற்றும் TV ஸ்கான் என்பனவும் இரத்தப் பரிசோதனையான CA 125 என்ற பரிசோதனையும் கட்டாயமாக செய்ய வேண்டும். இதில் ஆரம்ப நிலைகளை ஓரளவு சந்தேகப்பட உதவும். அத்துடன் தேவை ஏற்படின் 3 மாதங்களின் பின் மறுபடியும் பரிசோதனைகள் செய்ய வேண்டும். மிகவும் நுணுக்கமான தெளிவான விபரங்கள் அறியவேண்டுமாயின் CT Scan செய்து அறிய முடியும்.

சூலகப் புற்றுநோயின் ஆரம்ப நோய் அறிகுறிகள் எவை?

சூலகப் புற்று நோய் ஆரம்பிக்கும் போது நோய் அறிகுறிகள் எதுவும் காட்டுவதில்லை. இதனால் தான் ஆரம்ப நிலைகள் கண்டறியாமல் விடப்படுகின்றது. அத்துடன் ஆரம்ப நிலையில் அறிகுறிகளாக சிலவேளை சாப்பாட்டில் மனம் இல்லாத தன்மை சமிபாடு அற்ற தன்மை என்பன தோன்றும்போது பலரும் சாதாரண குடல் அல்சர் அதாவது குடல் புண் என நினைத்து முக்கியத்துவப்படாமல் விடுவது வழக்கம். அத்துடன் சூலகப்புற்று நோய் வரும்போது மாதவிடாய் போக்கில் பெரிதளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. இவ்வாறான காரணங்களினால் சூலகப் புற்றுநோய் ஆரம்பநிலைகள் விடுபட்டு போகின்றது.

சூலகப் புற்று நோய்கள் நன்கு வளர்ந்தபின் ஏற்படும் நோய் அறிகுறிகள் எவை?

அடி வயிற்றில் வீக்கம் .பேோன்று வருவதுடன் வயிறு பருத்துக் காணப்படும். அத்துடன் ஸ்கான் பரிசோதனை செய்யும் போது இவ்வாறான வீக்கத்தை சூலகக் கட்டி என உறுதிப்படுத்த முடியும். அத்துடன் CA12 இரத்தத்தில் சோதித்து பார்க்கும் போது மிகவும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்நோயை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சூலகக் கட்டிகள் அல்லது ஓவரியன் சிஸ்ற் எல்லாமே சூலகப் புற்றுநோயாகுமா?

ஓவரியன் சிஸ்றில் பலவகைகள் உள்ளன. நீர்க்கட்டிகள் இரத்தக்கட்டிகள் சொக்கிலேட் சிஸ்ற் போன்ற பல புற்றுநோய் இல்லாத கட்டிகள் உள்ளன. இவை புற்றுநோய்களாக மாறப்போவதில்லை. ஒரு சில வகைக் கட்டிகள் மட்டுமே புற்றுநோய் தன்மையை கொண்டிருக்கும். எனவே சூலகக்கட்டிகள் அல்லது லுவரியன் சிஸ்ற் என்றவுடன் புற்றுநோய் என்று நினைக்க வேண்டாம். சில புற்றுநோய் கட்டிகளில் மிகக் கூடுதலானவை புற்றுநோய்களிலும் ஆபத்தற்ற கட்டிகள் சிகிச்சை எந்த அளவுக்கு வெற்றி தருகின்றது

சத்திரசிகிச்சை செய்தாலும் ஊசி மருந்துகள் வழங்கினாலும் புற்றுநோய் எந்த அளவுக்கு மற்றைய இடங்களுக்கு பரவி உள்ளது என்பதனை பொறுத்து சிகிச்சை வெற்றி தரும். நோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போது சிறந்த வெற்றியையும் சற்று பிந்திய நிலையில் இருந்தால் சற்று குறைவான வெற்றியையும் சிகிச்சைகள் தருகின்றது. எனவே சூலக புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறிவதே சிறந்த சிகிச்சையை வழங்கி சிறந்த பயனைத் தர வழிவகுக்கும்.

ஆகையால் சூலகக்கட்டிகள் சூலகப்புற்றுநோய்கள் தொடர்பான சரியான புரிந்துணர்வு அவசியம்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56