(நா.தனுஜா)

பாராளுமன்றத்தை விரைந்து கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஆதரிப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.



கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இன்னமும் தொடர்ந்துவரும் நிலையில், விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



இந்நிலையில் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.



பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில் இக்கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன்.



பாராளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின், அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும்.