பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் உடல் நலக்குறைவால் மும்பையில்  உயிரிழந்துள்ளார்.

ரிஷி கபூர்

ஹிந்தித் திரையுலகில் பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் மகன் தான் ரிஷி கபூர்.

ராஜ்கபூர்

1970 மற்றும் 80-களில் புகழ்பெற்ற நடிகராக இருந்த ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல் உள்ளிட்ட பல படங்கள் மாபெரும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின் கடந்த செப்படம்பரில் இந்தியா திரும்பினார். இந்நிலையில் மோசமான உடல்நிலை காரணமாக மும்பையில் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருந்த ரிஷிகபூர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ரன்பீர் கபூர்

பொலிவூட் நடிகர் இர்பான் கான் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று ரிஷிகபூர் உயிரிழந்துள்ளார். பொலிவூட்டில் அடுத்தடுத்து நடிகர்கள் உயிரிழந்துள்ளதால் பொலிவூட் திரை உலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.