இந்திய கிரிக்கெட் சபை மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த ‘மினி ஐபிஎல்’ தொடரில் தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் பங்கேற்கும். அதேவேளை இந்தத் தொடர் அயல்நாட்டிலே நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்கா, அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த மினி ஐபிஎல் தொடர் நடைபெறும் எனத் தெரிகிறது.