அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க இந்திய அரசியல்வாதிகளிடம் ஹிலாரி பணம் வாங்கினார்: டிரம்ப் குற்றச்சாட்டு

Published By: Raam

25 Jun, 2016 | 07:12 PM
image

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். 

இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளின்டன் பணம் பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

டிரம்பின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்கங்கொண்ட கையேடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது. 

இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஹிலாரி வாக்களிப்பதற்காக, ஹிலாரி கிளின்டனின் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு இந்திய தொழில் அதிபர்கள் நன்கொடை வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். 

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசியல்வாதி அமர் சிங் பத்து இலட்சம் டொலர்கள் முதல் 50 இலட்சம் டொலர்கள் வரை கிளின்டன் குடும்ப அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். 

கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52