(இராஐதுரை ஹஷான்)

மருத்துவ வசதி பொறிமுறைகளை உள்ளடக்கிய ரோபோ இயந்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான பமுதின பிரேமசந்ரவினால் இந்த ரோபோ இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

200 நோய் தாக்கங்களை அடையாளப்படுத்தவும், மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் உரிய வழிமுறைகள் இந்த ரோபோ இயந்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உரையாடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ இயந்திரம் மேலும் நவீனமயப்படுத்த உரிய சுகாதார தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.