டோக்கியயோ ஒலிம்பிக் இரத்தாகும் என்கிறார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்

Published By: Digital Desk 3

29 Apr, 2020 | 06:04 PM
image

அடுத்த 2021 ஆம் ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இரத்து செய்யப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டு குழுத்தலைவரான  அந்த போட்டி ஏற்பாட்டு அமைப்பு குழு தலைவர் யொஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல நாடுகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு,  அடுத்தாண்டு 2021  ஜூலை 23 ஆம் முதல் ஆகஸ்டு 8 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கடந்த மாதம் (மார்ச்) அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த தொற்று நோய்க்கான மருந்து  இதுவரை கண்டுப்பிடிக்கப்படாததால், வேகமாக பரவும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இதனால்,டோக்கியோவில் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டு குழுத் தலைவர் யொஷிரோ மோரியிடம் கூறுகையில்,

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை 2022 ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்த வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டுக்குள் கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இரத்து செய்யப்படும். முன்பு போர் காலத்தில் மட்டுமே போட்டிகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் (கொரோனா) மோதுகிறோம். கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டால், அடுத்த கோடையில் நாங்கள் ஒலிம்பிக் போட்டியை அமைதியாக நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46