இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளமை உறுதியானதையடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரிலேயே அதிரடி துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் ஐ.சி.சி. யினால் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி குழாமில் இடம்பெற்றிருந்த குசேல் பெரேரா அதிரடியாக நீக்கப்பட்டு கௌசல் நில்வா அணில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.

கௌசல் சில்வா நியூசிலாந்துக்கு பயணமாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணி நியூ­ஸி­லாந்­திற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்டு இரண்டு டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ளது. இதன்­படி டெஸ்ட் போட்­டிக்­கான அணி நியூ­ஸி­லாந்து சென்­ற­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் 10ஆம் திகதி முத­லா­வது டெஸ்ட் போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.