மேற்­கிந்­தியத் தீவு கள் – இலங்கை அணி­க­ளுக்கி­டை­யி­லான இரண்­டா­வதும் கடை­சி­யு­மான இருப­துக்கு 20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வி­ருக்­கி­றது.

இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­வரும் மேற்­கிந்­தியத் தீவு கள் அணி இது­வ­ரையில் மோதிய டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர்­களில் ஒரு போட்­டியில் கூட வெற்­றி­பெ­றாத நிலையில் தொடர்­களை இழந்­தது.


இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் இலங்கை அணியின் அதி­ரடி ஆட்­டத்தால் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 30 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.


இரு­ப­துக்கு 20 தொடரின் இரண்­டா­வது போட்டி இன்று நடை­பெ­று­கி­றது. இந்தப் போட்­டி­யி­லா­வது வெற்­றி­பெற்று ஆறுதல் வெற்­றி­யுடன் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி நாடு திரும்­புமா என்­பதைப் பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.


பாகிஸ்தான் மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­ பெற்ற தொடர்­களை இலங்கை அணி அடுத்­த­டுத்து இழந்தது. இந்­நி­லையில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­கெ­தி­ராக நடை­பெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்­றி­ருப்­பது புது உற்­சா­கத்தைக் கொடுப்­ப­தாக அமைந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.